ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆண்களை விடவும் பெண்களே
அதிக நேரம் செலவிடுவதாக அமேசான் வெப் சர்வீசஸ் ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் “இந்தியப் புராணங்களின் அடிப்படையிலான கேம்ஸை விளையாடுவதில் 82 சதவீதம் பேர் ஆர்வமாக இருக்கின்றனர். இதில் 50 சதவீதம் பேர் ரிலாக்ஸ் செய்யவும், 13 சதவீதம் பேர் பணத்திற்காகவும் கேம் விளையாடுகின்றனர். 98 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களில் விளையாடுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.