இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் தொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம் அளித்திருக்கிறது. அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. போதிய அளவில் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருக்கிறது. இந்த 3 காரணங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது