நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அடிக்கடி வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு விண்ணப்பத்தை எளிதாக்கும் வகையில் sbi புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கி கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்கள் சேவை பிரிவில் ஆதார் எண்ணை கொடுத்தால் அங்குள்ள ஊழியர்கள் உங்களது தகுதிக்கு ஏற்ப பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் பெயர்களை பதிவு செய்வார்கள். இதற்கு வங்கி பாஸ்புக்கை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.