SamsungNeo கியூஎல்இடி, மைக்ரோ லெட் மற்றும் OLED டிவிகளை லாஸ் வேகாஸில் நடைபெற்று வரக்கூடிய CES 2023ல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புது டிவி மாடல்கள் வாயிலாக  நிறுவனம் பிரீமியம் படத் தரம் மற்றும் பல சாதன ஒருங்கிணைப்புக்கான ஆதரவைப் பெறும். சாம்சங்கின் புது நியோ கியூஎல்இடி உடன், 4K மற்றும் 8K ரெஸலுசன் கிடைக்கும்.

டிவி உடன் குவாண்டம் மினி LED லைட் பேனலானது பயன்படுத்தப்பட்டு உள்ளது. மைக்ரோ LED டிவி மாடல்கள் 50 -140 இன்ச் அளவுகளில் வரும். அதே சமயத்தில் சாம்சங்கின் OLED டிவி வரிசையின் புதுப்பிப்பு விகிதம் 144Hzஆக இருக்கும். OLED டிவியுடன் கேமிங்குக்கு AMD FreeSync பிரீமியம் ப்ரோ சான்றிதழ் கிடைக்கும். இந்த புது டிவிகளின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி சாம்சங் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.