
செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிவை விதைக்கிற, விதை நெற்களாக இருக்கிற ஆசிரியர்களை வீதியில தூக்கி போட்டுட்டு, 12 நாட்களாக போராடியவர்களை அதிகாலையில் அடிச்சு, எந்த அடிப்படை வசதியும் இல்ல. ஒரு கழிவறை போக கூட வசதி இல்லை. மாற்று உடை இல்லை, உடை மாற்றுகிற இடம் இல்ல. இந்த தம்பி எல்லாம் ஒரே சட்டையில் 12 நாள்ல இருக்காரு. இதுல அவங்க அவ்வளவு காயம்பட்டு, அவ்வளவு துயரம்.இதை எப்படியாவது துடைச்சு எரியணும்னு தான் போராடுறாங்க, உறுதியா நின்னு.
இதை பேசி சரி செய்ய முடியாதா ? அரசுக்கு தீர்க்க முடியாத ஒண்ணா ? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை இப்படி ஒரு கொடுமை ஆசிரியர்கள் வீதியில் நின்று போராடியது உண்டா ? இன்னைக்கு இல்லையே, எத்தனை ஆண்டுகளாக போராடுறாங்க…. நீங்க கொடுத்த வாக்குறுதி தான். நான் வந்தால்… கழக அரசு வந்தால் ? நான் முதலமைச்சரானால் நிறைவேற்றிக் கொடுப்பேன். இரக்கமற்ற இந்த எடப்பாடி அரசு, இருட்டறையில் போட்டிருக்கிறது அப்படின்னு பேசுனது நீங்கதான், காணொளி இருக்கு. குரல் ஒலி இருக்கு.
எதிர்க்கட்சியா இருக்கும் போது ஒன்னு பேசுறீங்க. ஆளும் கட்சியா வந்த உடனே ஒன்னு பேசுறதுமில்லை. எதையும் கண்டிருக்கிறதில்ல, கொடுமையான அடக்ககு முறை. கொடுங்கோன்மை இது. அடக்குமுறை என்பதெல்லாம் நல்ல வார்த்தை. இது கொடுங்கோன்மை. பூரா பேரையும் கொண்டு வந்து ஒரு இடத்துல அடச்சி வச்சிட்டு, பச்ச பிள்ளையை டார்ச்சர் பண்றாங்க. பாலு, ரொட்டி எங்க பிள்ளைகள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தா ? கல்லெடுத்து கொடுக்குறீங்களா ? எரிவதற்கு என சொன்னா ? என்ன இது எனத்தெரிவித்தார்.