பிரபல நடிகை பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்ததால் இணையதளத்தில் ஒரே கிசு கிசு. நடிகை சோமி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் மிது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். சோமி சமீபத்தில் தனது ரசிகர்களிடம் (AMA) என்னிடம் எதையும் கேளுங்கள் என்ற அமர்வு மூலம் உரையாடியுள்ளார். அந்த உரையாடலின் போது தனது கடந்த கால காதலைப் பற்றி அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் சோனு, நானும் சல்மானும் இணைந்து பழகிக் கொண்டிருக்கும் காலத்தில் அவர் வெவ்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

சல்மான்கானுடன் உள்ள பழக்கத்தை நான் மறப்பதற்காக வேறு பாதையில் ஆர்வத்தை காட்டும் வகையில் எனது கல்வியை முடித்தேன் எனக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் சல்மான் கானின் மீது உள்ள விருப்பத்தால் மட்டும் பாலிவுட்டுக்கு நடிக்க வந்தேன். ஆனால் அது ஒரு இளம் வயதில் ஏற்படும் மயக்கம் என உணர்ந்து அதில் இருந்து வெளியேறினேன் என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக சினிமாவில் திரும்பவும் செல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார். நான் தற்போது சினிமாவில் நடிக்காததற்கு முழு காரணம் சல்மான் தான் என கூறினார்.

நான் சினிமாவில் நடித்தால் சல்மானின் பற்றிய உண்மையை வெளிப்படுத கூடும் என்ற பயத்தில் சல்மான் கான் என்னை தடுக்க முற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அது தற்கொலை இல்லை ஒரு கொலை எனவும் கூறியுள்ளார்.