
ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒரு சுற்றறிக்கையை அந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. அதோடு இது தொடர்பான உதாரண வரைபடத்தையும், சுற்றறிக்கையையும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
அதில் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்பு, பழுதுபார்த்தல் பார்த்தல் போன்ற பணிகளை சரியான வழிமுறைகளை கடைபிடித்து செய்யுமாறு கூறப்பட்டுள்ளதோடு அனைத்து பள்ளிகளுக்கும் காவி நிறத்திற்கு பெயிண்ட் அடிக்குமாறு உத்திரவிடப்பட்டுள்ளது. இது கல்வியை காவிமயமாக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது .