
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலையில் தற்போது வரை முடிவுக்கு வராததால் பொருளாதார அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதால் பல உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தற்போது ரஷ்யா அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொள்ளாத நிலையில் அமெரிக்க அரசு ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், பெட்ரோலியம் யுரேனியம் போன்றவற்றை வாங்கும் நாடுகளுக்கு 500 % வரி விதிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக லிண்ட்சே கிரகாம் எம்பி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை தாக்குதல் செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்காவிடம் மத்திய அரசு கவலை தெரிவித்திருப்பதாக கூறினார். இது பற்றி வாஷிங்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவை பாதிக்குமா? என்பதை நாங்கள் உற்று நோக்கி கொண்டே இருக்கிறோம். ஒருவேளை பாதித்தால் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த பிரச்சனையில் கிரகாம் எம்பியுடன் அதிகாரிகளும், இந்திய தூதரகமும் தொடர்பில் இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவால் இந்தியாவில் உள்ள எரிசக்தி பற்றிய நமது நலன்கள் மற்றும் கவலைகளை அவரிடம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் கூறினார்.