காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும், பாஜக எம்.பி.யுமான வருண்காந்தி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது “வருண் காந்தி பாஜகவில் உள்ளார். அவர் எனது இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தாலோ (அ) பங்கேற்றாலோ அவருக்கு பிரச்சினையாகி விடும். அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார். எனினும் எனக்கு அது ஒத்துவராது. இதற்கிடையில் அவரை நேரில் பார்த்தால் கட்டி அணைத்துக்கொள்வேன். இருப்பினும் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு போகமாட்டேன். அதற்கு முன்னதாக நான் என் தலையை வெட்டிக் கொள்வேன்” என ராகுல்காந்தி தெரிவித்தார்.