டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேர்தல் ஆணையமும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவதற்கு முன் வாக்காளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்படுகிறது எனவும், அதன் பிறகு தான் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுகளை நீக்க பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நோட்டீஸ் அனுப்பப்படாமல் கருத்து கேட்கப்படாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.