கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சில நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ட்விட்டர், மெட்டா மற்றும் அமேஸான் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கியது.

இந்நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் சுமார் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படவுள்ளனர்.