என் மன் என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பனைமரம்,  தென்னை மரம் சார்ந்த 168 பொருட்களை மையப்படுத்தி,  ஒரு லட்சம் கோடி ரூபாய் வருடத்திற்கு பனைமரம் – தென்னை மரம் மட்டுமே நமக்கு வருமானம் கொடுக்கும் ஒரு லட்சம் கோடி. எங்களுடைய வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றோம். ஆனால் டாஸ்மார்க் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் என்பது 44 ஆயிரம் கோடி. அரசுக்கு டாஸ்மாக்  விற்றதன் மூலமாக   வரக்கூடிய டேக்ஸ்ல 44 ஆயிரம் கோடி, அதை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.

டாஸ்மார்க் இருப்பது தமிழக அரசுக்கு வருமானம் வரவேண்டும் என்பதற்காக இல்லை. டி.ஆர் பாலு அவர்களுடைய சாராய ஆளை நடக்க வேண்டும் என்பதற்காக….  ஜெகத்ரட்சகன் அவர்களுடைய சாராய ஆளை நடக்க வேண்டும் என்பதற்காக….  டாஸ்மார்க் சுற்றி திமுககாரங்க முட்டை போண்டா,  முட்டை வண்டி கடை,  டாஸ்மார்க் பார்ல பரோட்டா மாஸ்டர்…  இந்த மாதிரி திமுககாரர்கள் இருக்கணும் என்பதற்காக தான் டாஸ்மார்க் இருக்கு.

நாம் தெளிவாக இருக்கின்றோம்…  தென்னை மரம்,   பனை  மரம் பொருளில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் மட்டுமல்ல,  டாஸ்மாக் குடித்து குடித்து தமிழகத்தில் பெண்களுடைய தாலி அறுந்து கொண்டிருக்கிறது. அதை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி  கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.