ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக இருப்பின், உங்களுக்கு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது என்பது கடினம். இதில் ஒருவகை நோட்டுகள் போலியானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

உண்மை சோதனைக்கு பின், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. சந்தையிலுள்ள 2 வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். உங்களிடம் இவற்றில் எவ்விதமான நோட்டு இருந்தாலும், கவலைப்பட தேவையில்லை. 2 வகையான நோட்டுகளும் சந்தையில் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது.