ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 40 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் தருவதாகவும், செயலாக்க கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. MSME கடன்களும் 8.4 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும் என பேங்க் ஆப் பரோடா வங்கி விளக்கம் அளித்துள்ளது.