காவிரி பிரச்சனையை பொருத்தவரை திமுக அரசு செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா ? அவுங்க என்ன செய்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,

தமிழ்நாடு அரசு பொருத்தவரைக்கும் காவிரி நிதி நீர் பிரச்சனையில் என்னெல்லாம் மாநில அரசே என்னமோ,  அதெல்லாம் செஞ்சிருக்காங்க.  உச்சநீதிமன்றத்தில் போய் முறையிட்டு இருக்காங்க.. காவிரியின் நீர் மேலாண்மை வாரியத்தில் முறையிட்டு இருக்காங்க… ஒன்றிய அரசு கிட்டயும்,  ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து இந்த விஷயமாக ஒன்றிய அரசு தலையிடனும் முயற்சி பண்ணி இருக்காங்க…

எல்லா சட்ட ரீதியான எல்லா முயற்சியையும் தமிழ்நாடு நம்முடைய தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இதற்கு மேல் ஒரு மாநில அரசு செய்ய முடியாது.  இரண்டு மாநிலத்துக்கு இடையிலான பிரச்சனை… உச்சநீதிமன்றம் தீர்ப்பே சொல்லிடுச்சு. அந்த தீர்ப்பை மதிக்காம,  கர்நாடக மாநிலம் செயல்படுகிறது.

இப்ப என்ன செய்ய முடியும் ? நாம  சண்டைக்கா போக முடியும் ? இப்போ ஒன்றிய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத…. கர்நாடக மாநில அரசுக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எது எதுக்கெல்லாம்  மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்குறாங்க.  ஒன்றிய அரசு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்குணம். நிறைய விஷயத்துல அழுத்தம் கொடுக்கலாம் ஒன்றிய அரசு. அதை செய்ய மாட்டேங்கிறாங்க.

அடுத்து தேர்தல் வருது… அங்க பாஜக வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று கர்நாடகத்தில் சொல்ல முடியும். அந்த வெற்றி வாய்ப்புகளை கெடுத்துவிட கூடாது என சொல்லிட்டு தான் வேணும்ன்னு ஒன்றிய அரசு இந்த விஷயத்துல தலையிட மாட்டேங்கிறாங்க என தெரிவித்தார்.