தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்ஜே பாலாஜி. ஆர்ஜே வாக பிரபலமாகிய இவர் சிறந்த காமெடியனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய வெற்றி படங்களை இயக்கி, கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

இவரது நடிப்பில் இப்போது ரன் பேபி படம் வெளியாகியது. இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்.ஜே பாலாஜி தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலில்ரூ.4 கோடி சம்பளமாக பெற்றிருந்த ஆர்ஜே பாலாஜி இப்போது இப்படத்தின் வெற்றியால் தன் சம்பளத்தை 7 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.