நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாகபாளையம் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் குளிக்க சென்ற இடத்தில் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த சின்ராஜின் மகன் வினித் விமல் ராஜ் (21) இவர் தன்னுடன் படிக்கும் தனது இரு நண்பர்களையும் ஆத்துக்கு குளிக்க அழைத்துச் சென்றுள்ளார். வினித் விமல் ராஜ், ரகுமான் மற்றும் நந்தகுமார் ஆகிய மூவரும் நாகபாளையம் காவேரி ஆற்றில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் குளிக்க நண்பர்களுடன் சென்ற தன் மகன் வீடு திரும்பவில்லை என்ற பயத்தில் விமல் ராஜின் பெற்றார் ஆத்துக்கு சென்றுள்ளனர். அந்த மூவரையும் தேடிப் பார்த்தபோது காணவில்லை அந்த இடத்தில் காணவில்லை வேறு இடத்திற்கு போய் தேடிப் பார்ப்போம் என திரும்பபோகயில் கரையில் 3 பேரின் செருப்பு மற்றும் செல்போன்களை கண்டு அதிர்ச்சி அடைந்து ஐயோ பிள்ளைகளுக்கு ஆற்றில் ஏதோ ஆகிவிட்டது என பயந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து காணாமல் போன 3 மாணவர்களை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த நிலையில் மூன்று மாணவர்களின் சடலங்களை மீட்டெடுத்தனர் மேலும் இந்த 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.