ஓவியர், எழுத்தாளர், நடிகை என பன்முகத் தன்மை கொண்ட லலிதா லஜ்மி (90) காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் மறைந்த பாலிவுட் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் நடித்துள்ளார். மிகச்சிறந்த ஓவியரான லலிதா லஜ்மி பல படைப்புகளை உருவாக்கியுள்ளார். தனது ஓவியங்களைக் கொண்டு பல சர்வதேச கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.