ஒடிசா மாநிலத்தின் முதல்வராக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பதவி வகிப்பவர் நவீன் பட்நாயக். தொடர்ந்து 5-வது முறையாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நவீன் பட்நாயக் தற்போது தன்னுடைய தந்தையின் சமாதியை நகரின் வளர்ச்சிக்காக அகற்ற உத்தரவிட்டுள்ளார். ஒடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக் மறைவுக்கு பிறகு கடந்த 1997-ஆம் ஆண்டு நவீன் பட்நாயக் அரசியலில் அடி எடுத்து வைத்தார்.

பிஜூ பட்நாயக் உடல் புரி நகரத்தில் உள்ள ஸ்வர்கத்வார் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு பிரம்மாண்ட சமாதி கட்டப்பட்டுள்ள நிலையில் நகரின் வளர்ச்சிக்கு அது ஒரு பெரிய தடையாக இருந்துள்ளது. அதாவது மயானத்தின் பெரும் அளவு இடத்தை நினைவிடம் பிடித்திருந்தால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக நவீன் பட்நாயக் தன்னுடைய தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு கூறியுள்ளார். மேலும் இது ஒடிசா மக்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.