சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. வீடியோவில் பெரிய வேலை எதுவும் செய்யாமல், தனது வீட்டின் வாசலில் கேமரா வைத்து, ரீல்ஸ் உருவாக்கும் இந்த பெண் செய்த செயலைப் பார்த்து பலர், “எதுவும் செய்யாமலே மில்லியன் வியூஸ் வாங்குறாங்க!” எனக் கூறும் நிலைக்கு வந்துள்ளனர். குறைந்த செலவில் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று, இன்று கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sunita Kumari (@comedy_girl_143_)

இந்த வீடியோவில், ஓர் ஓட்டு வீட்டின் முன்புறம் தோட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு குடிசை வீடு, ஒரு ஆடு எனப் போதுமான கிராமப்புற அம்சங்களுடன் துவங்கும் இந்தக் காட்சியில், மஞ்சள் நிற உடையில் உள்ள பெண் ஒருவர் திடீரென ஓடிச் சென்று வீட்டின் சுவற்றில் ஏறி, கூரையின்மேல் சென்று ஷாருக்கானை போல கைகளை அசைத்து போஸ் கொடுக்கிறார். இது பார்ப்பவர்களை அடக்கமுடியாத சிரிப்பில் ஆழ்கின்றனர். “ஷாருக்கானே இதைப் பார்த்தா கைவிடுவாரோ?” எனும் வகையில் இணையதளத்தில் கலாய்ப்புகள் நிலவுகின்றன.

இந்த வீடியோ, `@comedy_girl_143_` என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு தற்போது வரை 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளன. நெட்டிசன்கள் கமெண்ட்களில், “ஸ்பைடர்மேன்”, “பக்கத்தில் இருக்கும் ஆடு கூட ‘கீழ இறங்குடா’னு சொல்ற மாதிரி இருக்கு” போன்ற நகைச்சுவை கருத்துகளைக் குறிப்பதாகவும், BCCI-யை நினைவு கூரும் அளவிற்கு வித்தியாசமான மீம்ஸ்களும் வெளியாகியுள்ளன.