ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரி சோதனை சாவடி ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இளம் பெண் ஒருவர் காரில் வந்திருந்தார். அங்கு வந்த அவர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி அப்பகுதியில் புஷ்பா பட  பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி வீடியோ எடுத்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சில பக்தர்கள் திருப்பதி விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அந்த இளம் பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்களின் சிலர் இந்த இளம்பெண்ணை திருப்பதி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால்  அந்த இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.