இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட் அலர்ட் என்பது நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்படுவது.

நிர்வாகங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் அதீத அளவுக்கு மழை பொழிய போகின்றது என்பதை குறிப்பதாக இருக்கிறது. மழை பொழிவை பொறுத்த வரைக்கும் ஆரஞ்சு அலட் அப்படின்னா 12 சென்டிமீட்டரில் இருந்து 20 சென்டிமீட்டருக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ரெட் அலெர்ட் அப்படி என்றால்,

20 சென்டிமீட்டருக்கு மேலாக 24 மணி நேரத்திற்குள்ளாக ஒரு பகுதியில் மழை பொழியுது அப்படின்னா….  அங்க மழை பொழிவதற்கு வாய்ப்பு இருக்குது அப்படினா… அந்த பகுதிக்கு தான் ரெட் அலெர்ட் விடுப்பாங்க. ஏற்கனவே வடகடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கைதான் ( ஆரஞ்சு அலெர்ட்) விடுக்கப்பட்டிருந்தது.

12 சென்டிமீட்டர் இருந்து 20 சென்டிமீட்டர் குள்ளாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சொல்லி இருந்தாங்க. இப்ப அந்த புயல் உடைய தீவிரத் தன்மை,  அதனுடைய நகர்வு. இதையெல்லாம் அடிப்படையாக கொண்டு மழையின் தீவிரம் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தற்போது ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.