செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC  காவிரி நீரை கர்நாடக அணையில் இருந்து திறக்க வேண்டும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போன காரணத்தினாலே,  தமிழகத்திற்கு உபரி நிறை வழங்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருகிறது.  ஆகவே இந்த உபரிநீரை… நமக்கு உரிய நீராக… உரிய உரிமையாக…  கர்நாடக அரசு கருதுகிறது. ஆனால் நாம் நம்முடைய உரிமையை கேட்கின்றோம்.

இந்த 177.25 TMCயை அவர்கள் எந்த காலத்திலும் தருவதற்கு தயாராக இல்லை. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசிடம் முறையிட இன்றைக்கு இந்த கையாளாக திமுக அரசு தயாராக இல்லை. கர்நாடகா அரசை கண்டித்து சொல்வதற்கு இவர் தயாராக இல்லை. மவுன சாமியாராக மௌன விரதம் இருந்து கொண்டிருக்கிறார். வாய் திறக்க மறுப்பதில் மர்மம் என்னவென்று நமக்கு தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்…. ஆணையும் பரிந்துரை செய்தும்…. ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தும்….  பலமுறை உத்தரவிட்டும் அவர்களுக்கு தண்ணீர் தர மனமில்லை. ஆக கர்நாடக அரசு நடந்து கொள்வது நியாயம் இல்லை. ஆகவே இன்றைக்கு உறுதியாக நடவடிக்கை எடுக்க திமுக அரசு,  கர்நாடக அரசிடம் வலியுறுத்தவில்லை என  டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதேபோல விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, பத்திர கட்டண உயர்வு, அதே போல குப்பை வரி உயர்வு, இதோடு சேர்த்து காய்கறிகள் – பலசரக்கு இந்த விலைகள் எல்லாம் உயர்ந்து இருக்கிறது.

இன்றைக்கு மணல், சிமெண்ட் விலை உயர்ந்திருக்கிறது. அதனால் கட்டுமான பணி பாதிப்பு என்று அவர்களும் போராட்ட தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். மணல், ஜல்லி,  சிமென்டின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்திருப்பதால் கட்டுமான பணிகள் அப்படியப்படியே நிற்கிறது. தமிழ்நாடு முழுவதும் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதால்,  எலும்புக்கூடுகள் போல கட்டிடங்கள் காட்சியளிப்பதை பார்த்து வேதனை படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.