ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் இன்று மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சந்தேகிக்கப்படும் நபர் என கூறப்படும் ஒருவரின் பையில் இருந்த டைரியில் ஹிந்தி, ஆங்கில எழுத்துக்களில் குறிப்புகள் கிடைத்துள்ளது. அதில் கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முக்கிய சாட்சியான ராஷிக்கின் உதவியுடன் குற்றம்சாட்டப்பட்டவரின் வரைபடம் ஒன்றை காவல்துறையினர் தயார் செய்து வெளியிட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு அரசு சாரா தொழிலாளி என்பது ராஷிக்கிடம் இருந்து கிடைத்த தகவல் கூறுகிறது.