பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. இருந்தாலும் கோர்ட்டின் இத்தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 21ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்திருக்கிறது. இந்நிலையில் சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேரணி நடந்தது. இதற்கென கட்சிக்காரர்கள் அமரும் வகையில் மேடை அமைக்கப்பட்டது. அப்போது திடீரென்று மேடை சரிந்து விழுந்தது. மேடையிலிருந்த ஆண், பெண் உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.