SBI வங்கியின் சர்வரானது ஏப்ரல் 3ம் தேதி இன்று காலை 9:19 மணி முதல் முடங்கியது. இதன் காரணமாக அப்போது முதல் SBI வங்கியின் நெட் பேங்கிங், யுபிஐ, யோனோ ஆப் உள்ளிட்ட பல சேவைகளும் செயலிழந்துவிட்டது. இதனால் பயனர்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில் இதுசார்ந்த தங்களின் புகார்களை பதிவுசெய்து வருகின்றனர்.

அதோடு ஏப்ரல் 2-ம் தேதியான நேற்றும் இதே போன்று சர்வர் முடக்கம் காரணமாக பயனாளர்கள் தவித்தனர். இதுகுறித்து வங்கியின் அதிகாரபூர்வமான அறிக்கையில், வருட கணக்கு முடிப்பு நடவடிக்கைகள் காரணமாக தான் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. மாலை முதல் மீண்டும் அனைத்து விதமான ஆன்லைன் சேவைகளும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.