இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் இந்திய முஜாகிதீன் அமைப்பு. இதன் இணை நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தின் சூரத் நகரிலுள்ள முஸ்லிம்களை வெளியேற்றி விட்டு அணு குண்டு ஒன்றை நகரில் வைத்து வெடிக்க செய்ய இந்த பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று என்.ஐ.ஏ கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது. இத்தகவல் பட்கல் மற்றும் சக குற்றவாளிகளின் சாட்டிங் தகவல் வழியே தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போர் தொடுக்கும் அடிப்படையில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் பட்கல் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது.