இந்திய மக்களுக்கு ஆண்டு முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் மருத்துகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக 800-க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளை தனி பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தியாவில் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் 870 மருந்துகள் இருக்கிறது. அவற்றுள் 651 மருந்துகளின் உச்சவிலையை மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த புதிய நடைமுறையால் அந்த மருந்துகளின் விலை சுமார் 6.73 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்த மருந்துகளை சில்லரையாகவும், அதிக விலைக்கு விற்கக்கூடாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.