சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ராட்சத முதலையை விழுங்கி இருக்கிறது. அந்த முதலையை சரியாக விழுங்க முடியாமல் நடுரோட்டில் மலைப்பாம்பு சிரமப்படுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அங்கிருந்த பலர் அந்த பாம்புக்கு உதவ முயற்சி செய்கின்றனர். கடைசியில் விலங்குகள் நல மருத்துவர்கள் மலைப் பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, அதன் வயிற்றில் இருந்த முதலையை வெளியில் எடுத்தனர். இந்த முயற்சியின் போது மலைப் பாம்பை மருத்துவர்கள் கொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.