தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை சென்ற டிச,.4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். தற்போது ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது “பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என என் அம்மா சிறு வயதிலேயே எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்.

நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் எனவும் அவர் கூறுவார். இதனால் தான் நான் கதாநாயகி ஆன பின் குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டேன். தற்போது 31 குழந்தைகள் என்னிடம் உள்ளனர். அவர்களை தத்தெடுத்து வளர்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த குழந்தைகளுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் கூறவே முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.