தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “லியோ”. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் படம் செம ஹிட்டடித்தது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 171-வது படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் எனவும் இப்படத்தை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும், லலித்தும் போட்டிப்போட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பக்கம் ரஜினிகாந்தின் பல்வேறு திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மற்றொருபக்கம் லோகேஷின் மாஸ்டர், லியோ படத்தை லலித் தயாரித்துள்ளார். ஆகவே இவர்கள் 2 பேரில் யாருக்கு ரஜினிகாந்தின் 171 வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் ரஜினி -லோகேஷ் இணையும் படத்தை லலித் தான் தயாரிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.

முன்பே மாஸ்டர் மற்றும் லியோ படத்தை லலித் தயாரித்து இருப்பதால் இவருக்கும் லோகேஷிற்கும் நல்ல நெருக்கம் இருக்கிறதாம். அதோடு லலித்தின் தயாரிப்பில் படம் எடுப்பது லோகேஷிற்கு மிகவும் பிடித்து விட்டதால் அவர்தான் ரஜினியின் 171-வது திரைப்படத்தை தயாரிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக சன் நிறுவனம் மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதாக சொன்னாலும் லோகேஷ் லலித்தின் தயாரிப்பிலேயே ரஜினி திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.