தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமான வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜன் சமீபத்திய பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு இதுவரை சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் நடந்தது கிடையாது. அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பெரிய ஹீரோயின் ஆகணும் என்ற அவசியமே எனக்கு இல்லை.

என்னுடைய ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டி கைதட்டினால் அதுவே எனக்கு போதுமானது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை வாணி போஜன் விமானத்தில் பணி பெண்ணாக பணிபுரிந்த போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு சென்றுள்ளது. ஆனால் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட வேண்டாம் என்ற நோக்கத்திற்காக விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பை வாணி போஜன் நிராகரித்துவிட்டார். இதேபோன்று பேச்சுலர் படத்திலும் நடிக்க நடிகை வாணி போஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் இருந்ததால் பேச்சுலர் படத்தையும் வாணி போஜன் நிராகரித்து விட்டார். இந்த தகவலை ஒரு பேட்டியில் அவரே கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.