தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பாரதிராஜா தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு தற்போது 80 வயது ஆகும் நிலையில் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா நடிகை குஷ்புவை திட்டி தீர்த்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை நடிகை குஷ்பூ ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது பாரதிராஜா இயக்கத்தில் கேப்டன் மகள் என்ற திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடித்தார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு பாம்பு என்றால் மிகவும் பயமாம்.

பாம்பை பார்த்தால் தனக்கு வியர்த்து விறுவிறுக்க ஆரம்பித்து விடும் என பாரதிராஜா கூறுவாராம். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வில் இருந்த நடிகை குஷ்பூ வேறு ஒரு படத்தின் சூட்டிங்க்காக பல் பிடுங்கப்பட்ட பாம்பை கொண்டு வந்ததை பார்த்துள்ளார். நடிகை குஷ்புவுக்கு பாம்பை பார்த்தால் பயமில்லை என்பதால் பல் பிடுங்கப்பட்ட பாம்பை கையில் எடுத்துக் கொண்டு பாரதிராஜாவிடம் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். அதை பார்த்த பாரதிராஜா பயந்து ஓட விடாமல் குஷ்பூ அவரை துரத்தியுள்ளார். உடனே படக்குழுவினர் குஷ்புவை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜா தான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு குஷ்புதான் காரணம் எனக்கூறி கன்னாபின்னா வென அவரை திட்டி தீர்த்துள்ளார். மேலும் இந்த தகவலை நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.