ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசாமி கோவில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அன்று இங்கு மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

அந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை(சனிக்கிழமை) வேலைநாளாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை (21.01.2023) அன்று தை அமாவாசை என்பதால் பணிநாளாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்தனர். எனவே  அதற்கு பதில், வருகிற 28- ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  வரும்      28-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்  வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கபட்டுள்ளது.