சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். போயஸ் கார்டனில் 150 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீட்டை கட்டி குடி புகுந்துள்ளார்.

அந்த வகையில் விவாகரத்துக்கு முன்பு ரஜினிகாந்த் தனுஷிடம் போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டாம் என்றும் ரஜினிகாந்தின் பேச்சை மீறி தனுஷ் இடத்தை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது ரஜினிகாந்தின் உறவினர்கள் சிலர் தனுஷ் குடும்பத்தினரை தாக்கி பேசியுள்ளனர். இதனால் தனுஷ் பல படங்களில் நடித்து சொந்த பணத்தில் பிரம்மாண்ட வீட்டை கட்டியதாக கூறப்படுகிறது.