தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் சமந்தா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சாகுந்தலம் உருவாகி வரும் நிலையில் பாலிவுட்டில் ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கும் சிடேல் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.

இந்த வெப் சீரிஸுக்காக கடுமையாக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியை ரொம்ப லவ் பண்ணுவதாகவும் அவருடைய பீட்சா படத்தின் போது அவரை பிடித்து விட்டதாகவும் மனம் திறந்து பேசி உள்ளார். தற்போது அவர் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.