பீகார் மாநிலத்தில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, என்ஜினுடன் இணைக்கும் COUPLING-ஐ பிரிக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் ரயில்வே ஊழியரான அமல் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சிக்கி உடல் நசுங்கி பலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியுள்ளார்.

இதனால் தான் இந்த விபரீத நிகழ்வு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. அலாரம் ஒலி எழுந்தவுடன், ஓட்டுநர் ரயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். என்ஜினை மாற்றவோ அல்லது விபத்தை தடுக்கவோ, அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.