மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதியாக நடந்த பேரணியில், கலவரம் வெடிக்கத் தொடங்கியது. கடந்த 2023-ம் ஆண்டு இருந்து, இந்த வன்முறை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாமில் தஞ்சம் அடைந்து, மற்றவர்கள் அண்டை மாநிலங்களில் குடியேறினர்.

இதைத்தொடர்ந்து பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் சென்ற வீடியோ அனைவரையும் பதற வைத்தது. இதில் பல பேர் உயிரிழந்தனர். எனினும் இந்த வன்முறை இன்றளவும் ஓயவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்த மணிப்பூர் மீண்டும் கலவரம் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று மணிப்பூர் கிராமத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த சிலர் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் பழங்குடி இனத்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து, அவர்களது பொருள்கள் மற்றும் உடைகளை சூறையாடினர்.

அதோடு துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அது மட்டும் இன்றி மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்தனர். பாதுகாப்பிற்காக ரிசர்வ் காவல்துறை படை சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்தப் பெண்ணின் உடலை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து பதற்ற நிலை காரணமாக பெரும்பாலான மக்கள் அருகில் உள்ள முஸ்லிம் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.