தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ருத்ரன் திரைப்படம் மூன்று புள்ளி ஐந்து கோடிக்கு மேல் முதல் நாளில் வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் அதிக வசூல் பெரும் எனவும் கூறப்படுகிறது.