R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகள் R.D சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை 6.7%ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் மாதத்தில், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.3% வரை மத்திய அரசு உயர்த்தியது. ஐந்தாண்டு R.D வைப்புத்தொகைக்கு அதிகபட்சமாக 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.