நடிகர் விஷாலின் குற்றச்சாட்டு அடிப்படையிலே மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை எடுத்து,  மும்பைக்கு விசாரணை நடத்த ஒரு அதிகாரியை அனுப்பி இருக்கிறது. விஷால் சொல்லியிருந்தது என்னவென்றால் ? CBFC என்று சொல்லப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பிலே, சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அவருடைய படத்திற்கு அவரே லஞ்சம் கொடுக்க வேண்டியது இருந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவித்து இருந்தா.டர். இந்நிலையில் தான் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய ஒளிபரப்புத்துறை  அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மும்பைக்கு ஒரு அதிகாரியை அனுப்பி இன்றே விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருக்கிறது.

இதைத்தவிர இதே போல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த தகவல் இருந்தாலும் அதை தெரிவிக்கும்படியும் அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.  இந்த படம் மட்டுமல்லாமல் வேறு இதுபோன்று ஊழல் விவகாரங்கள் இருந்தாலும் அதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  விசாரணை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகவே CBFC விவகாரத்தை விஷால் தெரிவித்தது குறித்து  கருது தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம், இது மிகவும் வருத்தத்தக்க விஷயம் என்றும், துரதிஷ்டவசமான இந்த குற்றச்சாட்டு மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  எந்த விதமான ஊழலையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூரே நேரடியாக இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.