தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதோடு வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா மற்றும் யோகி பாபு போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை  தயாரித்திருந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபமாக பெற்று தந்தது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இன்ஜினியரிங் கல்லூரி கதையம்சத்தில் உருவாகும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடிக்கிறாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். மேலும் மீண்டும் லவ் டுடே கூட்டணி இணைவதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.