தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்ஜுன். ஒரு காலத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த நடிகர் அர்ஜுன் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். லியோ படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஷ்கின், திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இதனால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் லியோ படத்தின் சூட்டிங்கில் தற்போது நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு செயற்கையான மேக்கப் போடப்பட்டு போட்டோ சூட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.