கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து  நான்கு – ஐந்து நாட்கள் கூட ஆகாத நிலையில்,

நேற்று மகராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம் எல் ஏக்கள் அஜித் பவர் தலைமையில் ஆளும்  ஏக்நாத் ஷிண்டே – பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தார். அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பின்னர் தலைவராக தொடரும் சரத்பவார், கட்சியில் செயல் தலைவராக  ஸ்ரீமதி சுப்ரியா சுலே மற்றும் அஜித்பவார் உள்ளிட்டவர்களை நியமனம் செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த அஜித்பவார் கட்சியை இரண்டாக உடைத்துள்ளார்.

பிரதமர் மோடி NCP ( தேசியவாத காங்கிரஸ் கட்சி ) ஊழல் தொடர்பான விஷயங்களை பேசிய சில நாட்களிலே இந்த அரசியல் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளதை பலரும் பல விதமான கருத்துக்களை பேசி வருகின்றனர். பிரதமர் மோடி 70,000 கோடி அளவுக்கு ஊழல் குற்றசாட்டை சுமத்தி இருந்த நிலையில், இந்த 70,000 கோடி பணம் தற்போது யாரிடம் இருக்கின்றது என கேள்வி எழுப்பி அதிகாலை 1.12_க்கு கேள்வி எழுப்பி  உள்ளனர்.

ரகுராம் ராஜன் என்பவர்  NCP இன் 70,000 கோடி ஊழல்களின் நீண்ட பட்டியலை மோடி அறிவித்ததற்கு பிறகு நேற்று பாஜக என்சிபி கூட்டணி ஆஹா என மோடி பேசிய விடியோவை பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டை ரீ-ட்வீட் செய்த காயத்ரி ரகுராம், இப்போது அந்த ₹70,000 கோடி யாரிடம் உள்ளது? பாஜக ? அஜித் பவார் பாஜகவில் இணைந்ததால்.. 🤔? என கேள்வி எழுப்பி உள்ளார்.