சமூக ஊடகங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் பெறுவதற்காக, பிராங்க் என்ற பெயரில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு வாலிபர் மீது பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு அருகில் உள்ள மரத்தின் நிழலில் வாலிபர் ஒருவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்திலிருந்து கையில் பெட்ரோல் பாட்டிலுடன் இறங்கிய இளம் பெண், ரகசியமாகச் சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி லைட்டரால் தீவைத்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்; உடனே ஆடைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் பதறியடித்து எழுந்த அந்த வாலிபர், அலறியபடியே தரையில் தன் உடலைத் தேய்த்து சில நொடிகள் போராட்டத்திற்குப் பின் தீயை அணைக்கும் கொடூரக் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த மொத்த சம்பவத்தையும் அந்தப் பெண்ணின் நண்பன் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்ய, சுற்றியிருந்த மக்கள் யாரும் அந்த வாலிபருக்கு உதவ முன்வராமல் வேடிக்கை பார்த்தது இன்னும் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.
View this post on Instagram
“>
@simran_kol_9 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆபத்தான குறும்பு’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவைக் கண்டு கொந்தளித்த இணையவாசிகள், “இது நகைச்சுவை அல்ல, ஒரு உயிரோடு விளையாடும் முட்டாள்தனம்” என்று சாடி வருவதோடு, அந்தப் பெண் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
