தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக தமிழர்கள் ஆவலாக இருக்கின்றனர். தமிழ் ஈழம் பற்றி விரிவான திட்டத்தை பிரபாகரன் விரைவில் அறிவிப்பார். இலங்கையில் தற்போதைய சூழல் ஏதுவாக இருப்பதால் பிரபாகரன் உயிருடன் இருப்பதை கூறுகின்றேன். இப்போது அவர் எங்கே இருக்கின்றார் என கூற முடியாது என தெரிவித்தார்.