ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம், இரட்டை இலை சின்னத்திற்கான சிக்கல் என அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து   இபிஎஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளரை பாஜக பின்வாங்க கூறியதன் காரணத்தை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார். நேர்காணலில் பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்குத்தான் எங்களது ஆதரவு. நடைமுறைப்படி இபிஎஸ்ஸுக்குதான் அதிக பலம் இருக்கிறது. அதனால் ஓபிஎஸ் வேட்பாளரை பின் வாங்க சொன்னோம். விரைவில் இருவரும் இணைவார்கள். தேர்தலில் வெற்றி அதிமுகவுக்கே என நம்பிக்கை தெரிவித்தார்.