ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஈரோடு தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.

இந்த ஆட்சி நிச்சயமாக முடிவடைந்து விடும். அதற்கு முன்னோட்டம் தான் ஈரோடு கிழக்கு தேர்தல். திமுக பணம் கொடுத்து எப்படியாவது வெற்றி பெறலாம் என நினைக்கிறது. பூத் வாரியாக தினசரி 200, 300 பேரை கூட்டி வந்து அவர்களை அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.