
பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து அந்த பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் Twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கான சட்ட கோரிக்கை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு இருக்கிறதா (அல்லது) பஞ்சாப் அரசு தரப்பில் வழங்கப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை.
எனினும் பிபிசி பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் பிரிவிணைவாத அமைப்பான வாரீஸ் டி பஞ்சாப் குழுவின் தலைவர் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த திடீர் முடக்கம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.