பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிகரித்து வருகிறது. அதாவது, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி காரணமாக தவிக்கும் பாகிஸ்தானில் சென்ற வருடம் ஜூன் மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. மேலும் எரிப்பொருள் தட்டுப்பாடு மற்றும் அன்னிய செலவாணி கையிருப்பு பற்றாக்குறையாலும் பாகிஸ்தான் திணறி வருகிறது.

ரொட்டி, பால் பொருட்கள், கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் விலை அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் சில்லரை விற்பனையில் 1 லிட்டர் பால் விலை ரூபாய்.190ல் இருந்து ரூ.210 ஆக உயர்ந்துள்ளது. கடன் பெறுவதற்குரிய முயற்சி தோல்வியடைந்த நிலையில், அந்நாட்டில் அத்தியாசிய பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு செல்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.